இன்னும் ரூ.2000 நோட்டுக்களை வைத்திருக்கிறீர்களா? உடனே இதை பண்ணுங்க!
ரூ.2000 நோட்டுக்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.2000 நோட்டு
2023ல் ரூ.2,000 நோட்டுகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து 98.15 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கி அமைப்புக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
மீதம் ரூ.6,577 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன. தற்போது ரூ.2000 நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் விரும்பினால் அதனை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்பிஐ அறிவிப்பு
இந்த வசதி ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு அலுவலகங்களில் (19 issue offices) கிடைக்கிறது. மேலும், 2,000 ரூபாய் நோட்டுக்களை தபால் நிலையத்திலும் டெபாசிட் செய்யலாம்.
அவர்கள் அதை வெளியீட்டு அலுவலகத்திற்கு அனுப்புவார்கள். பணம் வாடிக்கையாளரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். முன்னதாக ரிசர்வ் வங்கியின் ஆலோசனையைப் பெற்று ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்வது நல்லது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.