ரூ.2000 கொடுத்தால் ரூ.2100க்கு இறைச்சி; இதுதான் சரியான நேரம் - லாபம் குவிக்கும் வியாபாரி!

Delhi
By Sumathi May 26, 2023 03:56 AM GMT
Report

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதால், இறைச்சி கடையில் கூட்டம் குவிந்து வருகிறது.

 இறைச்சி கடை

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதனையடுத்து, டெல்லியில் இறைச்சி கடை நடத்தி வருபவர் சுமித் அகர்வால்.

ரூ.2000 கொடுத்தால் ரூ.2100க்கு இறைச்சி; இதுதான் சரியான நேரம் - லாபம் குவிக்கும் வியாபாரி! | 2000 Note You Can Buy Meat For 2100 Delhi

இவரது கடையில், ``2000 ரூபாய் நோட்டுகளை கொண்டுவந்தால் அதைப் பெற்றுக்கொண்டு 2100 ரூபாய்க்கு இறைச்சி வழங்கப்படும்" என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார்.

புத்திசாலிகள்

அதில், ரிசர்வ் வங்கி புத்திசாலி என்று நினைத்தால், டெல்லிவாசிகள் அதைவிட புத்திசாலிகள், விற்பனையை அதிகரிக்க இது ஒரு புதுமையான வழியாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து, டெல்லி வாசிகள் தங்கள் கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்வதால், இறைச்சி கடையில் கூட்டம் அதிகரித்து விற்பனை உச்சத்தைத் தொட்டது. தக்க சமயத்தில் மாற்றி யோசித்ததால், தனது கடையை பணம் செலவு இல்லாமல் விளம்பரம் செய்ததுடன் வியாபாரத்தையும் குவித்து வருகிறார்.