2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்; பெட்ரோல் பங்கிற்கு சீல் - பகீர் வாக்குமூலம்
2000 லிட்டர் மெத்தனால் பதுக்கப்பட்டிருப்பதாக பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய விவகாரம்
கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தொடர்ந்து, மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெத்தனால் பதுக்கல்
இதில் கைதான மாதேஷ் என்பவர் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள செயல்படாத பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில், பெட்ரோல் பங்கிற்கு நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி போலீஸார் அந்த இடத்துக்கு தற்காலிகமாக சீல் வைத்தனர். தற்போது மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.