தொடரும் மரண ஓலம்; கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு - தீவிர சிகிச்சையில் 157 பேர்!
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கள்ளச்சாராய விவகாரம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியாகும் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.
தொடர்ந்து, பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட தொடங்கியது. அதனையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் பருகியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
பலி எண்ணிக்கை
இதுவரை மொத்தம் 55 பேர் பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 157 பேருக்கு மருத்துவனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், இதற்காக அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சிகிச்சை வழங்கும் நடைமுறையை விரைவுப்படுத்தி வருகிறார்.
கருணாபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.