அப்படியே உயிரோடு புதைந்த 2000 பேர் - நாட்டை உலுக்கிய கோர சம்பவம்!

Death Papua New Guinea
By Sumathi May 28, 2024 04:12 AM GMT
Report

2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெரும் நிலச்சரிவு

பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து, நிலப்பரப்பு மற்றும் தளத்திற்கு உதவி பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக மீட்பு நடவடிக்கையில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

papua new guinea

இதற்கிடையில், நிலச்சரிவினால் 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்திருக்கலாம் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதுகுறித்து தேசிய பேரிடர் மையம், ஐ.நா.விற்கு அனுப்பிய கடிதத்தில், நிலச்சரிவில் புதைந்ததாக சந்தேகிக்கப்படும் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்துள்ளது.

மெத்தையில் அயர்ந்து தூங்கிய நபர்... - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி வைரல்

மெத்தையில் அயர்ந்து தூங்கிய நபர்... - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சி வைரல்

தொடரும் அபாயம்

இந்த எண்ணிக்கை மிகத் துல்லியமான எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், தொலைதூர தளம் என்பதால் துல்லியமான மக்கள்தொகை மதிப்பீட்டைப் பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்,150க்கும் மேற்பட்ட வீடுகள் கிட்டத்தட்ட இரண்டு மாடி உயரமுள்ள இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளன.

அப்படியே உயிரோடு புதைந்த 2000 பேர் - நாட்டை உலுக்கிய கோர சம்பவம்! | 2000 Buried Alive Landslide In Papua New Guinea

நிலச்சரிவு ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகும் குடியிருப்பாளர்கள் மண்வெட்டிகள், குச்சிகள் மற்றும் வெறும் கைகளைப் பயன்படுத்தி நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், மண் மற்றும் குப்பைகள் மீண்டும் பெயர்ந்து வரும் அபாயம் உள்ளதால் மேலும் 250 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 1,250க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.