குழந்தை திருமணம், கருத்தரிப்பு - ஒரே நாளில் 2,044 பேர் அதிரடி கைது

Assam Child Abuse Marriage Crime
By Sumathi 1 மாதம் முன்

குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தை திருமணம்

அசாமில் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பெண்களுக்கு உரிய வயதிற்கு முன்பு திருமணம் செய்வதையும், கருத்தரிப்பதையும் தடுக்கும் விதமாக புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம், கருத்தரிப்பு - ஒரே நாளில் 2,044 பேர் அதிரடி கைது | 2000 Arrested In Assam Over Child Marriage Act

அதன்படி, 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்ஸோ சட்டம் பாயும் எனவும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் பாயும் என உத்தரவிடப்பட்டது.

 2,044 பேர் கைது

இதன் அடிப்படையில், 24 மணிநேரத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணம் நடத்தி வைத்த புரோஹிதர், இஸ்லாமிய மதகுரு உள்ளிட்ட 52 பேரும் இந்த நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் இதுவரை 2,044 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய குடும்ப சுகாதார சர்வேயின் தரவுகளின் படி அசாமில் 20-24 கொண்ட பெண்களில் 32 சதவீதம் பேருக்கு 18 வயதுக்கு குறைவாக இருக்கும் போது திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் 12 சதவீதம் பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே கருத்தரிப்புக்கு ஆளாகிறார்கள் என சர்வே புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.