200 ஆண்டுகள் பழமையான கோட்டை - ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கும் சாபம்! ஏன் தெரியுமா?
ராஞ்சியில் 200 ஆண்டுகளாக ஒருகட்டிடத்தின் மீது தவறாமல் மின்னல் விழுந்து வருகிறது.
ஜகத்பால் சிங்கின் கோட்டை
மழைக்காலம் வந்தால் மின்னல், இடி எல்லாம் வருவது இயல்புதான். மின்னல்கள் கட்டிடங்களைத் தாக்குவதும்,மரங்களைத் தாக்குவதும் சகஜம் தான். ஆனால் 200 ஆண்டுகளாக ஒருகட்டிடத்தின் மீது தவறாமல் மின்னல் விழுந்து வருகிறது. இதில் ஏதேனும் மர்மம் உள்ளாதா? என இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் பித்தோரியா கிராம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ராஜா ஜகத்பால் சிங்கின் கோட்டை உள்ளது. இந்த கோட்டையில் 100 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனையாக இருந்துள்ளது.
இதனை மன்னர் ஜகத்பால் சிங், தனது தந்தையுடன் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. மன்னர் இருவரும் பித்தோரியாவை ஒரு முக்கியமான வர்த்தக நகரமாக நிறுவினார். குடிமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது பித்தோரியாவை ஆங்கிலேயர்கள் வசப்படுத்த நினைத்தனர் இதற்கு மன்னரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
புராணம் கதை?
இது அந்த நாட்டுமக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து கிளர்ச்சியாளர் தாக்கூர் விஸ்வநாத் சஹ்தியோவின் தலைமையில் போர் நடத்தினர். அப்போது கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை முறியடிக்க ஜகத்பால் ஆங்கிலேயர்களுக்கு உதவினார்.
அதன்பிறகு கிளர்ச்சித் தலைவர் கைது செய்யப்பட்டுச் சாகும் வரை தூக்கிலிடப்பட்டார்.தூக்கிலிடப்படுவதற்கு முன், தாக்கூர் விஸ்வநாத் சஹ்தியோ, மன்னர் ஜகத்பால் சிங்கின் ராஜ்ஜியத்தின் கோட்டை தூசியாக மாறும் வரை மின்னலால் தாக்கப்படும் என்றும் சபித்தார் எனப் புராணத்தின் கூறப்பட்டுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்குவதால் கட்டிடம் சிறிது சிறிதாகச் சேதமடைந்து வருகிறது.