20 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - 35 வயது நபர் கொடூரம்!

Sexual harassment Child Abuse Crime Mumbai
By Sumathi 1 வாரம் முன்

20 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

மகாராஷ்டிரா, மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள் இந்த தம்பதியினர். இவர்களுக்கு 20 மாத பெண் குழந்தை உள்ளது. இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது இளைஞர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

20 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - 35 வயது நபர் கொடூரம்! | 20 Month Old Baby Raped In Mumbai

இந்நிலையில், பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த சமயத்தில் அந்த இளைஞர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து குழந்தை அழுதுக் கொண்டே இருந்ததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 இளைஞர் கொடுமை

அங்கு பரிசோதித்ததில், குழந்தை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பக்கத்து வீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டார்.