திருமண ஊர்வலம்.. ரூ.20 லட்சம் வரை பொழிந்த பண மழை - முண்டியடித்து அள்ளிய மக்கள்!
திருமண ஊர்வலத்தில் ரூ.20 லட்சம் வரை பண மழை பொழிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஊர்வலம்..
உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு ஆடம்பர திருமணம் பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவில் மணமகன் பல்லக்கில்
ஊர்வலமாக அழைத்து வரப்படும் போது பணமழையை பொழிந்தது நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த திருமணமாக போகும் தம்பதி வரவேற்கும் வழியில் இரண்டு ஜே.சி.பி இயந்திரம் தொடர்ந்து வருகிறது.
அதில் ஏறி நின்றுகொண்டு விருந்தினர்கள் பணமழை பொழிந்தனர். 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை இதற்காக பயன்படுத்தினர். ஜே.சி.பி மட்டுமல்லாது மணமகன் ஊர்வலம் சென்ற தெருவின் ஓரங்களில் இருந்த,
பண மழை
கட்டடங்களின் மேலிருந்தும் மணமகன் மீது மணமகன் வீட்டார் பணத்தை மழையாக பொழிந்து வரவேற்றனர். இப்படியாக மொத்தம் 20 லட்சம் ரூபாய் வரை மழையாக பொழிந்த பிறகு, மணமகன் அர்மாண் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
இந்த சம்பவம் நடக்கும்போது அங்கிருந்த மக்கள் மழையாக பொழிந்த பணத்தை எடுக்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். மேலும், இந்த மணமகன் ஊர்வலத்தை காண வந்திருந்த திரளான விருந்தினர்கள்,
பொதுமக்களும் முண்டியடித்துக்கொண்டு பணத்தை எடுத்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியது.