ஹோட்டல் பில் 90 லட்சம்; டிப்ஸ் மட்டுமே 20 லட்சமாம் - எங்கு நடந்தது தெரியுமா?
Dubai
Viral Photos
By Sumathi
ஹோட்டல் பில் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 லட்சம் டிப்ஸ்
துபாயில், FOUR SEASON எனும் பிரபல ரெசார்ட் அமைந்துள்ளது. இங்கு தினமும் பல வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம்.
அதன்படி, இரவு உணவுக்காக வந்த வாடிக்கையாளர்கள் சிலர் மாட்டிறைச்சி, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் உள்ளிட்ட உணவுகள் தொடங்கி மதுபானம் வரை பலவகை உணவுப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர்.
வைரல் போஸ்ட்
மேலும், உணவருந்திவிட்டு டிப்ஸ் மட்டுமே சுமார் 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இந்த பில்லின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ரெசார்ட், "பணம் வரும்.. போகும்" என குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு பல விதமான கமெண்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.