அந்த இடத்திலா தவெக மாநாடு? பிரம்மாண்டம் காட்டப்போகும் விஜயின் அடுத்த மூவ்!
மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பே அனைத்து பணிகளையும் முடிக்கும்படி விஜய் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாடு
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய விஜய், கட்சியின் முதல் மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்தத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அலங்கரிக்கப்பட்ட கட்சியாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக கட்சியின் சின்னம் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார்.அப்போது பேசிய அவர் இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்தோம்.
இனி வரப்போகும் காலத்தில் நம் கட்சி ரீதியாக நம்மைத் தயார்ப்படுத்தி தமிழகத்துக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து உழைப்போம் என்று கூறினார்.மேலும் நீங்கள் ஆவலுடன் இருக்கும் முதல் மாநாட்டின் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்றும் ,தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன மாநில மாநாடாக இது அமையும் என்றும் விஜய் கூறியிருந்தார்.
விஜய்
இந்நிலையில், மாநாட்டிற்கான பந்தற்கால் நடும் பணி அடுத்த வாரம் தொடங்க இருக்கும் நிலையில், மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பே அனைத்து பணிகளையும் முடிக்கும்படி விஜய் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அக்டோபர் 27-ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் கடிதம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.