மிரட்டி பலமுறை சீரழித்த 2 பேர்; மணமகன் வீட்டாருக்கு சென்ற வீடியோ - கதறும் இளம்பெண்!

Tamil nadu Sexual harassment Crime Ramanathapuram
By Jiyath May 08, 2024 05:43 AM GMT
Report

இளம்பெண் ஒருவரை சிறுவன் உட்பட 3 பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமை 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் "எனக்கு 18 வயதிற்கும் குறைவாக இருந்தபோது சமய சந்துரு (20) என்பவர் என்னை காதலித்து வந்தார்.

மிரட்டி பலமுறை சீரழித்த 2 பேர்; மணமகன் வீட்டாருக்கு சென்ற வீடியோ - கதறும் இளம்பெண்! | 2 Youths Raped A Young Girl Obscene Video

அப்போது அவர் என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். அதனை தனுஷ் (20) என்பவர் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அவரும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அப்போது அதனை சமய சந்துரு வீடியோ எடுத்தார். இதனையடுத்து இருவரும் வீடியோவை காட்டி மிரட்டி அடிக்கடி என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் அந்த வீடியோவை காட்டி என்னுடன் உல்லாசமாக இருந்தார்.

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

இருவர் கைது 

அதையும் சமய சந்துரு, தனுஷ் ஆகியோர் வீடியோ எடுத்துக் கொண்டனர். பின்னர் அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டினர். இதனால் அவர்கள் சொன்னபடி நடந்தேன்.

மிரட்டி பலமுறை சீரழித்த 2 பேர்; மணமகன் வீட்டாருக்கு சென்ற வீடியோ - கதறும் இளம்பெண்! | 2 Youths Raped A Young Girl Obscene Video

இந்நிலையில் எனக்கு திருமணம் நிச்சயமானது. இதுகுறித்து அறிந்த அவர்கள் என்னை தொடர்பு கொண்டு பணம், நகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனை அறிந்த மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர்" என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சமய சந்துரு, தனுஷ், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து சமய சந்துரு, தனுஷ் ஆகிய 2 பேரை கைது செய்து 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.