தென்னந்தோப்பில் கதறிய குழந்தை - நரபலிக்காக 68வயது மந்திரவாதி நடத்திய பூஜை
2 வயது குழந்தையை மந்திரவாதி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை கடத்தல்
நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - அகிலா தம்பதி. இவர்களுக்கு சஸ்விகா(2) என்ற மகள் உள்ளார். அங்குள்ள மணலி பகுதியில் தனது தாத்தா வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார்.
புகாரின் பேரில் அங்கு காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அருகில் உள்ள பகுதிகளில் தீவிரமாக தேடினர். திடீரென வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காரகொண்டான்விளை தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் குழந்தையின் அழு குரல் கேட்டது.
நரபலி
உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை வைத்து முதியவர் ஒருவர் பூஜை செய்துகொண்டிருந்தார். அவரிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணையில் குழந்தையை கடத்தியவர் 68-வயதான ராசப்பன் என்பதும், தனது வீட்டில் பூஜை அறை வைத்து மாந்திரீக தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் குழந்தை சஸ்விகாவை கடத்திச் சென்று நகைகளை பறித்துக்கொண்டு, நரபலி கொடுக்க திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.