விபத்தின் போது காரில் திறந்த ஏர்பேக் - பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை!
விபத்தின்போது காரின் ஏர்பேக் திறந்ததில் 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டுக்கல்லி பகுதியை 2 வயதுக் குழந்தை உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை படபரம்ப நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கார், எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஏர்பேக் திறந்து வெளிவந்தது.
அப்போது காரின் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயதுக் குழந்தை மீது வேகமாக வெளிவந்த ஏர்பேக் குழைந்தயின் மீது வேகமாக மோதியது .
அதிர்ச்சி
இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் குழந்தையின் தாய் உட்பட மற்ற 4 பேரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆனால் கேரளாவில் விபத்தில் 2 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.