நாகப்பாம்பை கடித்தே கொன்ற 2 வயது சிறுவன் - அடுத்த நொடி நடந்த சுவாரஸ்யம்!
சிறுவன் ஒருவன் பாம்பை கடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சுற்றிய பாம்பு
பீகார், மேற்கு சம்பரன் பகுதியைச் சேர்ந்தவ்ர சிறுவன் கோவிந்தா குமார்(2). தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு நாகப் பாம்பு ஒன்று வந்துள்ளது.
அதனை கல்லால் எறிந்துள்ளார். உடனே, அந்த பாம்பு சிறுவனின் கையில் இறுக்கமாக சுற்றிக்கொண்டது. தொடர்ந்து பாம்பை சிறுவன் பலமாக கடித்ததாக கூறப்படுகிறது.
சிறுவனின் செயல்
சத்தம் கேட்டு அங்கு வந்த சிறுவனின் பெற்றோர், பார்க்கையில் குழந்தை மயங்கி கிடந்துள்ளது. குழந்தை கையில் இருந்த பாம்பு இறந்து கிடந்துள்ளது.
உடனே சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவன், பாம்பினை கடித்தே கொன்ற சம்பவம் அப்பகுதியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.