காதலர்களிடம் பணம் பறிப்பு.. ஒரிஜினல் காவலர்களிடமே வேலையை காட்டிய போலி போலீஸ்!
காவலர்கள் வேடத்தில் காதலர்களிடம் பணம் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலி போலீஸ்
பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முகமது, 27 வயதான இவர் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு 12 மணியளவில் வேலையை முடித்துவிட்டு தனது காதலியுடன் சென்றுள்ளார்.
அப்பொழுது இருசக்கர வாகனத்தில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இரண்டுபேர் அந்த காதலர்களை நிறுத்தி பணம் தருமாறு மிரட்டியுள்ளனர். பயந்துபோன அவர்கள் ரூ.2000 ஏடிஎம்-ல் எடுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் நின்றுகொண்டிருந்த இவர்களிடம் விசாரித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், அந்த போலியான இருவரும் நாங்கள் போலீஸ் நீங்கள் யார் என காவல்துறையினிடமே கேட்டுள்ளனர். சுதாரித்த போலீசார் அந்த இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது சென்னை பெரும்பாக்கம் தில்லைநாயகம் தெருவை சேர்ந்த கலீல் (வயது 42) என்றும் கந்தன்சாவடி தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருவதும் மற்றொருவர் அதே நிறுவனத்தில் எலக்ட்ரிஷன் வேலை பார்த்து வரும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ் (வயது 26) பிஇ பட்டதாரி என்பதும் தெரியவந்தது.
பின்னர், போலீசார் இருவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 392 பிரிவின் படி வழக்கு பதிவு செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.