விவசாயிகளே அனைவரும் மாஸ்க் போடுங்கள் : தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாகை காவலர்

tamilnadu-samugam
By Nandhini Jun 02, 2021 04:24 AM GMT
Report

விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாகை காவலர் தத்ரூபமாக நடித்து காட்டி அசத்தினார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிவிரைவாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த தொற்றிலிருந்து அனைவரும் தங்களை தற்காத்துக்கொள்ள டபுள் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அனைவரும் மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை குறித்து நாகை நகர காவல் நிலையத்தில் வேலைப்புரிந்து வரும் ஆய்வாளர் பெரியசாமி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது தான் அணிந்திருந்த காக்கி சட்டையை கழற்றி வைத்து விட்டு, விவசாயி வேடத்தில் நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாஸ்க் அணியாதபோது கொரோனா எப்படி நம்மை தாக்கும் என்று தரையில் விழுந்து தத்துரூபமாக நடித்து காட்டினார்.

கொரோனாவால் எப்படி ஒருவர் உயிரிழக்கிறார்கள் என்பதை பாடலுடன் தத்துரூபமாக நடித்துக் காட்டிய போது அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சில நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். காவலர் என்றால் கடுமை காட்டுபவர் என்ற கூற்றை உடைத்து மக்களின் உயிர் காக்க தன்னலம் பாராமல் சமூக அக்கறையுடன் ஆய்வாளர் பெரியசாமி நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள் அவரைப் பாராட்டிச் சென்றனர்.

விவசாயிகளே அனைவரும் மாஸ்க் போடுங்கள் : தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நாகை காவலர் | Tamilnadu Samugam