காருக்குள் நடந்த வினோத விளையாட்டு... இப்படி ஒரு விபரீத கேம்-ஆ? - அதிர்ச்சி சம்பவம்!

South Korea Death
By Vinothini Aug 03, 2023 06:45 AM GMT
Report

தென் கொரியாவில் காருக்குள் விபரீதமான விளையாட்டு விளையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் விசாரணை

தென் கொரியாவில் கடந்த திங்கட்கிழமை இருவர் தங்களது தொடையில் காயங்களுடன் இருப்பதாக போலீசார் கூறினார். பின்னர், நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருவர் படுகாயத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் உயிருக்கு போராடும் நிலையில் இருந்தார்.

2-were-dead-by-playing-cruel-game

அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் ஏதோ ஒரு ஆபத்தான விளையாட்டை விளையாடி இவ்வாறு நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். மேலும், பிரேத பரிசோதனையில் ஒருவர் பாறையில் ஏற்பட்ட காயத்தில் அதிக ரத்த கசிவு ஏற்பட்டதால் இறந்துள்ளார், என்று கூறியுள்ளனர்.

விபரீத விளையாட்டு

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவர் கேம் மூலம் சந்தித்துள்ளனர், இருவரும், பழகி நண்பர்களாகியுள்ளனர். மேலும், போலீசார் தரப்பில் கூறுகையில், "அவர்கள் நீண்ட காலமாக நிதி நெருக்கடியில் இருந்துள்ளார், பின்னர் காருக்குள் வாழ்ந்து ஒரு போட்டியை நடத்துவதன் மூலம் தங்கள் நிதி நெருக்கடியை தீர்க்க முடிவு செய்தனர்.

2-were-dead-by-playing-cruel-game

அந்த விளையாட்டில் காருக்குள் தூங்காமல் இருக்கவேண்டும், யாரவது தூங்கினால், பாறையை வைத்து 5 முறை அடிக்கவேண்டும். இதனால் இருவர் கைகளிலும் கால்களிலும் பல வெட்டுக்காயங்கள் இருந்தது. இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இந்த விளையாட்டை விளையாடியுள்ளனர். மேலும், இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்" என்று கூறியுள்ளனர்.