“எவன்கூட வேணும்னாலும் ஜாலியாயிரு ,எனக்கு மனைவியாயிரு” - கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!
விவாகரத்து தர மறுத்த கணவனை கூலிப்படை மூலம் கொன்ற மனைவி மற்றும் அவரின் கூட்டத்தினரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் வசிக்கும் சுருதி என்ற பெண் தன்னுடைய கணவர் பிரபாகரோடு வசித்து வந்தார். இந்நிலையில் அந்த சுருதியின் காதலன் ஹிதேஷ் வாளா அந்த பெண்ணின் திருமண வாழவில் குறுக்கே வந்தார் .அதனால் அந்த பெண் கணவனை விவகாரத்து செய்து விட்டு தன்னுடைய காதலனோடு வாழ விரும்பினார்.ஆனால் இதை தெரிந்து கொண்ட அந்த கணவர் அவரின் மனைவியிடம் விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறி விட்டார்.மேலும் அந்த காதலை தொடர்ந்தாலும் தனக்கு கவலையில்லை என்று கூறினார்.
அதனால் அந்த பெண் தன்னுடைய தோழி பிரியாவின் ஆலோசனைப்படி கணவரை கொலை செய்ய கூலி படையை ஏற்பாடு செய்தார் .சந்தோஷ் ரெட்டி என்பவரின் தலைமையில் இயங்கிய கூலி படையினருக்கு 3 லட்சம் பணம் கொடுத்தார். அதனால் அந்த சந்தோஷ் குழுவினர் , அந்த சுருதியின் கணவரை ஒரு நாள் காரில் கூட்டி சென்று கொலை செய்து விட்டனர். பிறகு அந்த பெண் அந்த கூலி படைக்கு தன்னுடைய தாலியை விற்று பணம் கொடுத்து செட்டில் செய்தார் .பிறகு போலீசுக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிந்ததும் விசாரணை மேற்கொண்டதில், அந்த சுருதி கணவனை கூலி படைமூலம் கொன்றதை கண்டுபிடித்தனர் பிறகு சந்தோஷ், பிரியா மற்றும் பெண்ணின் காதலன் ஹித்தேஷ் வாலா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். ரெட்டியின் மற்ற இரண்டு உதவியாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.