விமான இறக்கையில் நின்று ஜாலி ஆட்டம்.. ஆக்ஷன் எடுத்த நிறுவனம் - விளையாட்டால் வந்த வினை!

Switzerland Argentina World
By Vinothini Aug 29, 2023 08:05 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஊழியர்கள் இருவர் விமான இறக்கையில் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

விமான ஊழியர்கள்

அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று பியூனஸ் அயர்ஸ். இங்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த விமான நிறுவனத்தின் ’போயிங் 777’ ரக விமானம் பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் தனது அடுத்த பயணத்துக்காக காத்திருக்க, அதே விமானத்தின் பைலட் மற்றும் பெண் ஊழியர் ஆகியோர் விமான இறக்கையில் திடீரென நடனம் ஆடினர்.

2-were-danced-in-flights-wing

ஆவார்கள் இருவரும், ஒருவர் பின் ஒருவராக வந்து நின்று போஸ் கொடுப்பது போன்று ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விமான நிறுவனம்

இந்நிலையில், அந்த வீடியோ பரவியது, அது சுவிஸ் விமான நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. பின்னர், ’தரையிலிருந்து சுமார் 17 அடி உயரத்தில் அமைந்திருக்கும் விமானத்தின் இறக்கை மீது நடமாடுவது ஆபத்தானது’ என்பதோடு, ’அவசரகால தரையிறக்கம் தவிர்த்து அங்கே பிரவேசிக்க எவருக்கும் அனுமதி இல்லை’ என சாடி இருக்கிறது.

மேலும், கேபினிலிருந்து நேரடியாக இறக்கை மீது நடமாடிய விமான ஊழியர்கள் மீது துறை விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்கு விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து இணையத்தில் சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்த்தும் பதிவிட்டுவருகின்றனர்.

இந்த வீடியோவில் தென்பட்ட விமானத்தின் பழுதுற்ற பரப்பை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிலர் பகிர ஆரம்பிக்க, ஸ்விஸ் விமான நிறுவனம் மேலும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.