மினி பஸ் கவிழ்ந்து விபத்து.. பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி - முதல்வர் நிதியுதவி!
பேருந்து ஒன்று மின் கம்பம் மீது மோதி கவிந்ததில் 2 மாணவர்கள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மினி பஸ்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து வ.புதுப்பட்டிக்கு திங்கள் மாலை தனியார் மினி பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பயணித்தனர். அப்பொழுது போதர் குளம் கண்மாய் அருகே வளைவான பகுதியில் வேகமாக சென்று திரும்பிய போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதிய மினி பேருந்து கவிழ்ந்தது.
தகவலறிந்து வந்த போலீஸார், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் BRS எம்.பி கோத்தா பிரபாகர் ரெட்டிக்கு கத்திக் குத்து - தெலங்கானாவில் பரபரப்பு!
முதல்வர் நிதியுதவி
இந்நிலையில், அந்த பேருந்தில் பயணித்த வத்திராயிருப்பு இந்து மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நந்தகுமார்(16), பாண்டி(16) ஆகிய இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், காயமடைந்த 20 பேர் வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்ப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா மருத்துவமனையில் இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.