வெடித்து சிதறிய பஸ்..அலறியடித்து ஓடிய மக்கள்..சென்னையில் அசம்பாவிதம்!!

Tamil nadu Chennai Accident
By Karthick Sep 22, 2023 05:19 AM GMT
Report

இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று வெடித்து சிதறிய காரணத்தால், பொதுமக்கள் பேருந்தில் இருந்து அலறியடித்து ஓடின.

தீப்பிடித்து எறிந்த பேருந்து

சென்னை கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்க அருகே திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பெங்களூரு நோக்கி சென்று மின்சார பஸ்ஸான இதில் சுமார் 30 பயணிகள் பயணித்துள்ளனர்.

bus-got-fire-in-chennai-today-morning

பூந்தமல்லி அருகே தனியார் பேருந்து ஒன்று இந்த ஆம்னி மின்சார பேருந்து பின்னால் மோதிய காரணத்தால் திடீரென பேருந்து தீப்பிடித்துள்ளது. தீ அதிகளவில் எரிய துவங்கியவுடன் பேருந்தில் பயணித்த பயணிகள் பேருந்தில் இறங்கி அலறியடித்து ஓடினர்.

கடும் போக்குவரத்து நெரிசல்

உடனே பொதுமக்கள் அந்த வழியாக சென்ற தண்ணீர் லாரியை மடக்கி தண்ணீர் அடித்து தீயை கட்டுப்படுத்த முயன்றும் தீ அதிகளவில் எரிந்ததன் காரணமாக பேருந்து முழுவதுமே தீக்கிரையாகியிருக்கின்றது.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் இருந்த தீயை கட்டுப்படுத்தினர். இந்த எதிர்ப்பாராத விபத்தின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.