10 & 12-ஆம் வகுப்புக்களுக்கு இனி 2 பொதுத்தேர்வுகள் - ஷாக் கொடுத்த அறிவிப்பு
வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு இனி 12-ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு முறை நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வுகள்
வரும் 2025-26 ஆம் ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வுகளை ஆண்டுக்கு இரண்டு முறை எழுத வசதி அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் PM SHRI (பிரதம மந்திரி பள்ளிகள் ரைசிங் இந்தியா) திட்டத்தைத் துவங்கி வைத்த பிறகு பேசிய அவர், 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) முக்கிய நோக்கங்களில் ஒன்று மாணவர்களின் கல்வி அழுத்தத்தைக் குறைப்பதே என்றார்.
இரண்டு முறையாக
NEP 2020 திட்டத்தின் கீழ், மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய பாடத்திட்டக் கட்டமைப்பை (NCF) அறிவித்தது.
இந்த பாடத்திட்டத்தில், வருடத்திற்கு இரண்டு முறையாக பொதுத்தேர்வுகளை நடத்துவதும் அடங்கும். இந்த அணுகுமுறை மாணவர்களுக்கு அவர்களின் சிறந்த மதிப்பெண்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான உதவுவதுடன், தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட போதுமான நேரத்தையும் வாய்ப்புகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.