10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

By Irumporai Nov 07, 2022 09:39 AM GMT
Report

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது 10 மற்றும் 12 வகுப்புக்கான பொது தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு | Public Exam Date Announced

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை - 2023

ஏப்ரல் 6 - மொழிப்பாடம்,

ஏப்ரல் 10 - ஆங்கிலம்,

ஏப்ரல் 13 - கணிதம்,

ஏப்ரல் 15 - அறிவியல்

ஏப்ரல் 20 - சமூக அறிவியல்