குடிமகன்களுக்கு அரசு இன்ப அதிர்ச்சி; இதென்ன குடியோடு கொண்டாடும் நாளா? எகிறிய வானதி சீனிவாசன்!

Tamil nadu Vanathi Srinivasan TASMAC
By Sumathi Nov 11, 2023 03:51 AM GMT
Report

டாஸ்மாக் கடைகளில் 2 வகைகளில் புதிய பீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய பீர் 

டாஸ்மாக்கிற்கு புதிதாக காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர் பாட்டில்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை ரூ.160.

new-beers-launched

வரும் டிசம்பர் மாதத்துக்குள் 5 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மது பானங்களின் விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் எனவும் கூறப்படுகிறது.

எதற்கு இந்த புதிய பீர் அறிமுகம்? குடிமகன்கள் விருப்பம் - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

எதற்கு இந்த புதிய பீர் அறிமுகம்? குடிமகன்கள் விருப்பம் - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

 வானதி சீனிவாசன் காட்டம்

இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் "தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா?

vanathy-srinivasan

இது தான் திராவிட அரசின் சாதனைகளா? தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ? மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.