குடிமகன்களுக்கு அரசு இன்ப அதிர்ச்சி; இதென்ன குடியோடு கொண்டாடும் நாளா? எகிறிய வானதி சீனிவாசன்!
டாஸ்மாக் கடைகளில் 2 வகைகளில் புதிய பீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பீர்
டாஸ்மாக்கிற்கு புதிதாக காட்பாதர், தண்டர்போல்ட் ஸ்டிராங்க் என்ற பெயரில் இரண்டு பீர் பாட்டில்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை ரூ.160.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் 5 வகைகளில் பீர் பாட்டில்களை அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு மது பானங்களின் விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் எனவும் கூறப்படுகிறது.
வானதி சீனிவாசன் காட்டம்
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், இந்த புதிய பீர் பாட்டில் வகைகளை தீபாவளி விருந்தாக குடிமகன்கள் பார்க்கிறார்கள். வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் 5 வகைகளில் புதிய பீர் பாட்டில்கள் வரும் என கூறுவது தான் "தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர துடிக்கும் அரசின் நோக்கமா?
இது தான் திராவிட அரசின் சாதனைகளா?
தீபாவளி என்பது குடும்பத்துடன் கொண்டாடப்படும் நாளா? இல்லை குடியோடு கொண்டாடப்படும் நாளா ?
மகளிர் பற்றி அக்கறை காட்டுவதாக கூறும் திமுக அரசு அதே மகளிர் வாழ்க்கையில் விளையாடுவது சரியா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.