ICU'வில் தீவிர சிகிச்சை - படுக்கை அருகே அடுத்தடுத்து திருமணம் செய்த பெண்கள்!!

Uttar Pradesh India Marriage
By Karthick Jun 20, 2024 07:02 AM GMT
Report

திருமணம்

இந்தியாவில் திருமணம் என்பது பண்டிகைக்கு இணையான ஒன்றாகவே உள்ளது. குழந்தை பிறந்தது முதலே பிள்ளைகளின் திருமணம் குறித்த சிந்தனைகள் எப்போதுமே பெற்றோர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும்.

2 marriages in icu lucknow hospital

அப்படி தான், நேரம் பார்த்து நடைபெறும் இந்நிகழ்வு சில இடங்களில் சட்டென நடந்து விடும்.அவ்வாறான ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடந்துள்ளது. இணையத்தில் இது குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

ICU'வில்....

நோய்வாய்ப்பட்ட தங்களது தந்தையின் ஆசைக்காக இரண்டு பெண்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தந்தையின் படுக்கை அருகிலேயே மருத்துவமனை ஊழியர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

தன்பாலின திருமணம்..நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை !!

தன்பாலின திருமணம்..நீண்ட நாள் தோழியை மணந்து கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை !!

தந்தை உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாத நிலையில் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளை பின்பற்றியுன், மருத்துவமனையின் வழிகாட்டுதலின் படி ICUவில் இந்த திருமணம் நடந்துள்ளது.