பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் - நேர்ந்த விபரீதத்தில் பலி!

Coimbatore Death
By Sumathi May 24, 2024 10:24 AM GMT
Report

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மின்சார தாக்குதல்

கோவை, சரவணம்பட்டியில் விமானப்படைக்குச் சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு உள்ளது. இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் - நேர்ந்த விபரீதத்தில் பலி! | 2 Kids Killed Electric Shock Covai Housing Board

இதில், குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (4) மற்றும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா ஆகிய இருவரும் அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர்.

நாய்கள் கடித்து சிறுமி படுகாயம்: மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்கும் - ராதாகிருஷ்ணன்!

நாய்கள் கடித்து சிறுமி படுகாயம்: மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்கும் - ராதாகிருஷ்ணன்!

2 குழந்தைகள் பலி

இந்நிலையில், தொடர்ந்து சறுக்கு விளையாட முயன்றுள்ளனர். அப்போது இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. உடனே, மயங்கிய இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த 2 குழந்தைகள் - நேர்ந்த விபரீதத்தில் பலி! | 2 Kids Killed Electric Shock Covai Housing Board

தகவலறிந்து விரைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.