பூங்காவில் கர்ப்பமாக இருந்த கொரில்லா; உயிரை காப்பாற்ற சிசேரியன் - இறுதியில் நடந்தது..?
United States of America
World
By Jiyath
a year ago
செகானி என்ற கொரில்லாவிற்கு சிசேரியன் மூலமாக குட்டி கொரில்லா பிறந்துள்ளது.
செகானி கொரில்லா
அமெரிக்காவின் டெக்ஸாஸில் ஃபோர்ட் வொர்த் (Fort Worth Zoo) என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் செகானி என்ற கொரில்லா கர்ப்பபாக இருந்தது.
ஆனால், பிரீக்ளம்ப்சியா எனப்படும் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் தீவிர ரத்த அழுத்த நிலையால் அந்த கொரில்லா பாதிக்கப்பட்டிருந்தது.
குட்டி கொரில்லா
இதனால் தாய் மற்றும் குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை (சிசேரியன்) அவசியம் என மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து செகானி கொரில்லாவுக்கு நடந்த அறுவை சிகிச்சை குட்டி கொரில்லா பிறந்தது.
அந்த குட்டி கொரில்லாவுக்கு ஜமீலா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. செகானி மற்றும் ஜமீலா ஆகியோர் தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாக உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.