ஆசிட் கலந்த குளிர்பானம்.. மாணவனுக்கு கிட்னி செயலிழப்பு - சக மாணவனின் சதிச்செயல்?

Kidney Disease Kanyakumari
By Sumathi Oct 03, 2022 08:02 AM GMT
Report

ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளது.

 குளிர்பானம்

கன்னியாகுமரி, களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின். இவர் குழித்துறை அருகே அதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும்

ஆசிட் கலந்த குளிர்பானம்.. மாணவனுக்கு கிட்னி செயலிழப்பு - சக மாணவனின் சதிச்செயல்? | 2 Kidneys Of A Student Who Drank Acid Mixed Drink

தனியார் பள்ளியில் 6 வகுப்பு பயின்று வருகிறார். சம்பவத்தன்று மாணவன் அஸ்வின் மதியம் உணவு சாப்பிட நிற்கும்போது சக மாணவர் ஒருவர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

 கிட்னி செயலிழப்பு

அஸ்வினும் வாங்கி குடித்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு வயிறு வலி எடுத்துள்ளது. தொடர்ந்து பெற்றோர்கள் மாணவனை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது,

குளிர்பானத்தில் ஆசிட் தன்மை அதிகம் இருந்ததால், குடல், தொண்டை மற்றும் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.