கொடூரச் சம்பவம் - சேலம் அருகே 40 மாடுகள் மீது ஆசிட் வீச்சு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
Tamil nadu
By Nandhini
சேலம் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆசீட் வீச்சு
சேலம், மேட்டுப்பாளையம், கல்லார் அருகே 40 மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ளனர். இந்த ஆசீட் வீச்சில் 40 மாடுகளின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதி கருகியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது 40 மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆசிட் வீசிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.