பாஜகவினர் வைத்த பட்டாசு; கொழுந்துவிட்டு எறிந்த குடிசைகள் - அதிர்ச்சி சம்பவம்!
பாஜகவினர் வைத்த பட்டாசுகள் வெடித்து சிதறி குடிசை வீடுகள் பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எறிந்த குடிசைகள்
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான எஸ்.ஜி.எம்.ரமேஷ் என்பவர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் காடம்பாடி என்ற பகுதியில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது வரவேற்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அது வெடித்து சிதறிய துண்டுகள் எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த பக்கிரிசாமி என்பவரது குடிசை வீட்டின் கூரை மீது விழுந்தது.
அதிர்ச்சி சம்பவம்
இதனால் தீ வேகமாக பரவி வீட்டின் கூரை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அது பக்கத்து வீட்டு மீதும் பரவி தீப்பிடித்து எறிந்தது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்க முயன்றனர்.
இதற்கிடையில் தீ பற்றியதை கண்டும் காணாமல் பாஜகவினர் அங்கிருந்து நழுவிச் சென்றதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து மாவட்ட அலுவலர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.