வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்..!

Tamil nadu
By Thahir May 14, 2023 05:47 PM GMT
Report

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

வடமாநில தொழிலாளர்களின் குடிசைகளுக்கு தீ வைப்பு 

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமானோர் தங்கி சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்து வருகின்றனர்.

ஜேடர்பாளையத்தில் நேற்று இரவு வடமாநில தங்கியிருந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். மண்ணெண்ணெய் அடங்கிய குப்பிகளை ஏறிந்து அதன் மூலம் தீ வைக்கப்பட்டுள்ளது.

Mysterious persons set fire to huts

இந்த சம்பவம் தொடர்பாக கோவை சரக டிஜிஜி 8 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 தொழிலாளர்கள் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.