தண்ணீர் டிரம்மில் சடலமாகக் கிடந்த 2 சிறுமிகள்..54 வயதுடைய நபர் செய்த கொடூரம்- கதி கலங்க வைக்கும் சம்பவம்!
தண்ணீர் டிரம்மில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 சிறுமிகள்
மாகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் மனைவி தனது 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் , நேற்று 10 வயது மற்றும் 8 வயதுடைய சிறுமிகள் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென காணாமல் போய் உள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் உதவியுடன் நாள் முழுவதும் தேடியுள்ளனர். எங்குத் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தேடுதல் ஈடுபட்டனர்.
அப்போது முதல் மாடியில் அஜய் தாஸ் தங்கியிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட டிரம்மில் இரண்டு சிறுமிகளும் சடலமாகக் கிடந்தனர். உடனடியாக அவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பாலியல் வன்கொடுமை
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில், அதே வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்த 54 வயதான அஜய் தாஸ் என்பவர் சிறுமிகளை லட்டு கொடுத்துக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
மேலும் சிறுமிகள் இருவரையும் ஒன்றன்பின் ஒன்றாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.அதன் பிறகு உடலைத் தண்ணீர் டிரம்மில் போட்டுள்ளார். இதனையடுத்து அஜய் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.