நடுவானிலிருந்து அப்படியே விழுந்து நொறுங்கிய விமானம் - என்ன நடந்தது?

Flight Colombia Death
By Sumathi Jun 27, 2024 12:57 PM GMT
Report

விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

விமான விபத்து

கொலம்பியா, வடக்கு பகுதியில் உள்ள அட்லாண்டிகோ மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பதறியடித்துக் கொண்டு வந்து பார்த்துள்ளனர்.

நடுவானிலிருந்து அப்படியே விழுந்து நொறுங்கிய விமானம் - என்ன நடந்தது? | 2 Die In Small Plane Crash In North Colombia

உடனே அதிர்ச்சியடைந்து இதுகுறித்து அவசர உதவி எண் மூலம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆய்வு செய்ததில் விமானத்தில் இருந்த இரண்டு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் - 7 பேர் மாயம், ஒருவர் பலி!

கடலில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் - 7 பேர் மாயம், ஒருவர் பலி!

2 பேர் பலி

தொடர்ந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்த விசாரணையில், மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று மாகாண காவல்துறை தலைவர் ஜான் உர்ரேயா தெரிவித்துள்ளார்.

நடுவானிலிருந்து அப்படியே விழுந்து நொறுங்கிய விமானம் - என்ன நடந்தது? | 2 Die In Small Plane Crash In North Colombia

இதற்கிடையில், வானிலை ஆய்வு மையமும் அட்லாண்டிகோ மாகாணம் மற்றும் சுற்றியுள்ள சில பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.