விடுதியில் வெடித்த பிரிட்ஜ்.. தீயில் கருகி உயிரிழந்த 2 பெண்கள் - கோர சம்பவம்!

Tamil nadu Madurai Fire Accident
By Vidhya Senthil Sep 12, 2024 04:45 AM GMT
Report

  மதுரையில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை 

மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் மகளிர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலையில் திடீரென ஒரு அறையிலிருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

fire accident

இதில் அறையிலிருந்த ஆடைகள் எரிந்து பிற அறைகளுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதனைக் கண்ட பெண்கள் அறையிலிருந்து அலறி அடித்து வெளியேறினர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி வாடிப்பட்டியில் தனியார்ப் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா(22) ஆகியோர் உயிரிழந்தனர்.

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி!

பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- தொழிலாளர்கள் உடல் கருகி பலி!

இந்த சம்பவம் குறித்துத் தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது . உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையில் சிக்கி சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து

இச்சம்பவம் பற்றி திடீர் நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட விடுதி அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழமையானது.

madurai

பயன்படுத்த உகந்தது அல்ல என்று கூறி கட்டிடத்தை இடிக்குமாறு மதுரை மாநகராட்சி கடந்த ஓராண்டுக்கு முன்னரே நோட்டீஸ் அனுப்பியும் கூட அந்தக் கட்டிடம் இயங்கிவந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து மதுரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது