நாட்டுக்கோழி குழம்பு - 100 பவுன் நகை, ரூ.2.5 கோடிப் பணம் என ஸ்கெட்ச் போட்டு சுருட்டிய பெண்
மகள்போலப் பழகி 100 பவுன் நகை, ரூ.2.5 கோடிப் பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட்
கோவை, புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளார். பின் இருவரும் இணைந்து தொழில் செய்து வந்துள்ளனர்.
இதற்கிடையே வர்ஷினி, தனக்குத் தெரிந்த இடைத்தரகர்கள் எனக் கூறி அருண்குமார், சுரேந்தர், பிரவீன் ஆகிய மூவரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தொடர்ந்து அனைவரும் உணவு சாப்பிட்டுள்ளனர்.
நகை கொள்ளை
அதனையடுத்து ராஜேஸ்வரி தூங்கியவுடன், ரூ.2.5 கோடிப் பணம், 100 பவுன் தங்க நகைகள், ஐபோன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உடனே இதுகுறித்து அறிந்து பதறிய ராஜேஸ்வரி போலீஸில் புகாரளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், விசாரணையில், அருண்குமார், கார்த்திக் என்பவர் மாட்டிக்கொண்டதையடுத்து ரூ.2 லட்சம் பணம், ஆறு ஜோடி வளையல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பவத்தன்று ராஜேஸ்வரிக்கு இட்லி, நாட்டுக்கோழி குழம்பு கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அதைச் சாப்பிட்டுவிட்டு தூங்கும்போதுதான் கைவரிசையை காட்டியுள்ளனர்.