15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் - சென்னையில் அதிர்ச்சி!
15 வயது சிறுவன், 9 வயது சிறுமிக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணம்
சென்னையை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, மயிலாப்பூரில் 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் அவர்களது பெற்றோர் குழந்தை திருமணம் செய்து வைத்ததாக கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் விசாரித்தார். அதில், இரு வீட்டார் சம்மதத்துடன் குழந்தைகள் திருமணம் நடந்தது தெரிய வந்தது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஹரிதா புகாரளித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், விசாரணை நடத்தி சிறுமி மற்றும் சிறுவனை மீட்டு சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, அவர்களது பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.