2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; 3 பேர் பலி - 25 பேர் படுகாயம்!
பேருந்து மோதி உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அளித்துள்ளார்.
கோர விபத்து
கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை தனியார் பேருந்து ஒன்று சென்றது. அதேபோல, பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து ஒன்று எதிரில் வந்தது.
இதில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது. அதனால், ஓட்டுநரின் இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது. அதில் எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
முதலமைச்சர் இரங்கல்
உடனே படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் 3 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதியுதவியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.