கோவில் கொடை விழாவில் தகராறு - சகோதரர்கள் குத்தி கொலை

Tirunelveli
By Karthikraja Aug 17, 2024 08:05 AM GMT
Report

கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவில் கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் உள்ள ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நேற்று (16.08.2024) இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

thisaiyanvilai temple

அப்பொழுது நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  

கணவன் மனைவி சண்டை - விலக்க சென்ற காவலருக்கு நேர்ந்த கதி

கணவன் மனைவி சண்டை - விலக்க சென்ற காவலருக்கு நேர்ந்த கதி

 முன் பகை

வாய்த்தகராறு கைகலப்பாக மாறி, ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர் மற்றொரு பிரிவை சேர்ந்த மதிராஜா, மதியழகன் என்ற சகோதரர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மற்றோரு சகோதரர் மகேஷ்வரன், ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

thisaiyanvilai

உயிரிழந்த மதிராஜா மற்றும் மதியழகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய காவல் துறையினர், பிரதே பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார், கொலை சம்பவத்தில் தொடர்புடைய பருன்( 27), ராஜ்குமார்(28), விபின் (27) ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

thisaiyanvilai police

மேலும் கொலை நடந்த இடம், விழா குழுவினர் வசிக்கும் பகுதியில் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே இருந்த முன்பகையும், கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்சனையும் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.