சரியா 2:15 மணிக்கு - 2 பாஜக MLA எங்க கட்சிக்கு வராங்க - புயலை கிளப்பும் அதிமுக

ADMK BJP K. Annamalai Edappadi K. Palaniswami
By Karthick Feb 27, 2024 07:44 AM GMT
Report

அதிமுகவின் முக்கிய புள்ளி பாஜகவில் இணைவதாக நேற்று தகவல் வெளியான நிலையில், இன்று அதற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

2:15 மணிக்கு

இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன், இன்று மதியம் 2:15 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சேலத்தில் பாஜகவில் இருந்து 2 எம்எல்ஏக்கள் அதிமுகவில் சேர உள்ளனர் என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

2-bjp-mla-joining-admk-today-by-215-pm

மேலும் இந்த விஷயம் சிரிப்புக்காக கூறவில்லை என்ற அவர் பெறுபவர்கள் கொங்கு மண்டலமாகவும் இருக்கலாம் தென்மண்டலமாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

2-bjp-mla-joining-admk-today-by-215-pm

மேலும், தான் பாஜகவில் இணைவதாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், நேற்று அவிநாசியில் எனது நண்பர் வீட்டிற்கு சென்றதாகவும், அவர் வீட்டின் எதிர்திசையில் தான் பாஜக நிகழ்ச்சி நடந்ததாக தெரிவித்தார்.

தமிழில் தானே சொல்கிறேன் - வேண்டுமென்றால் ..!! எல்.முருகன் ஆவேசம்

தமிழில் தானே சொல்கிறேன் - வேண்டுமென்றால் ..!! எல்.முருகன் ஆவேசம்

மாற்று கட்சி

நேற்றைய தினம், அதிமுக கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

2-bjp-mla-joining-admk-today-by-215-pm

மேலும், அதற்காக தனியாக நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நிகழ்ச்சி ரத்தான நிலையில், தற்போது தமிழக பாஜக கடும் விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் சொன்னது 2 எம்.எல்.ஏ - பாஜகவின் தமிழக எம்.எல்.ஏ 4 பேர் தான்..எப்படி..?