BSNL-க்கு தாவும் வாடிக்கையாளர்கள்; கலங்கிய நெட்வொர்க்ஸ் - 1 வாரத்தில் இத்தனை லட்சம் பேரா?
சுமார் 27.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றுள்ளது.
பிஎஸ்என்எல்
ஜியோ, ஏர்டெல், Vi ஆகியவை தங்கள் டெலிகாம் சேவை கட்டணத்தை 10 முதல் 27 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஆரம்ப கட்டணமே ரூபாய் 199 என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த கட்டண உயர்வை சமாளிக்க முடியாத மக்கள் தங்களது மொபைல் நெட்வொர்க்கை BSNL-க்கு மாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஜூலை 3-4 ஆம் தேதிக்கு பின்பு சுமார் 27.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் நம்பரை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற போர்டிங் ஆப்ஷன் இருக்கிறது.
இந்த ஆப்ஷனை பயன்படுத்தியே பலரும் மற்ற டெலிகாம் நிறுவனங்களில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.
மேலும், இந்த வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டும் என்றால் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது நெட்வொர்க் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.