வெறும் ரூ.50-க்கு இப்படி ஒரு BSNL Plan-ஆ! பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல ஆஃபர்!
அனைவருக்கும் லாக்டவுன்கள் வேண்டுமானால் பொதுவாக இருந்தாலும், ஆனால் வருமானம் ஒருபோதும் பொதுவானதாக இருந்ததில்லை.ஆகையால் தான் லாக்டவுன் பட்ஜெட்வாசிகளை மென்மேலும் வருத்துகிறது. எப்படி இன்னமும் 40 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுகொண்டு அன்றைய பொழுதை கழிக்கும் பட்ஜெட் வாசிகள் இருக்கிறார்களோ. அதேபோல் ரூ.10 க்கும் ரூ.20 க்கும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்கிற பட்ஜெட்வாசிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பிஎஸ்என்எல் எஸ்.டி.வி 49 திட்டமானது 2 ஜிபி அளவிலான டேட்டா நன்மையுடன் வருகிறது. இந்த எஸ்.டி.வி-யின் விலை ரூ.49 மட்டுமே என்பதால் நீங்கள் இலவசமாகப் பெறப் போகும் மொத்த டேட்டாவும் வெறும் 2ஜிபி மட்டுமே ஆகும். டேட்டா நன்மைகளை தவிர்த்து, ரூ.49 பிளான் ஆனது அதன் வாடிக்கையாளர்கள் 100 நிமிட இலவச அழைப்பு நன்மைகளையும் வழங்கும்.
குறிப்பிட்ட வரம்பு முடிந்த பின்னர், நிகழ்த்தப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். டேட்டா மற்றும் வாய்ஸ் அழைப்போடு சேர்த்து, மொத்தம் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளும் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும். இந்த புதிய எஸ்.டி.வி-49 ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், இது குறுகிய கால திட்டத்தை விரும்பும் மற்றும் பட்ஜெட் வாசிகளுக்கு மிகவும் ஏற்றது.