முதல் மாநாடு எப்போது எங்கு?? ரகசியமாக பணிகளை துரிதப்படுத்தும் த.வெ.க!!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
அறிவிப்பு வெளியான போதே தேசிய அளவில் கவனம் ஈர்த்தது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரும் சட்டென மாநிலம் முழுவதும் பரவியது.
தனது படப்பிடிப்புகளில் தற்போது பிஸியாக இருக்கும் விஜய், கட்சி பணிகளையும் பொதுச்செயலாளர் ஆனந்தை வைத்து மும்முரமாக இயக்கி வருகின்றார். அவ்வப்போது கட்சியின் ஆலோசனை கூட்டங்களை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நடத்தி வருகின்றார்.
ஆனால், கட்சியின் பொது நடவடிக்கைகள் இன்னும் துவங்கப்படவில்லை. கட்சியின் கொடி, சின்னம் போன்றவையும் அறிவிக்கப்படவில்லை. எப்போது கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் என்றஎதிர்பார்ப்பும் பலரிடமும் பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. சில நாட்கள் முன்பு விஜய் - சீமான் இருவரும் சந்தித்து பேசியதாக கூட செய்திகள் வெளியாகின.
ஆனால் கட்சி அறிவிப்பு குறித்து எந்த செய்தியும் இல்லை. இந்த சூழலில் தான் தற்போது புது செய்தி ஒன்று பலரின் கவனத்தை பெற்றுள்ளன. அதாவது விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி வருகிறது. அப்போது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மாநாடு மதுரையில் நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை, உறுதிப்படுத்தப்படாத செய்தி என்றாலும், தேர்தல் விதிமுறைகள் இருக்கும் நிலையில் ஜூன் 4-ஆம் தேதி வரை எந்த வித அரசியல் நிகழ்வுகளும் இருக்காது. அதனை தொடர்ந்து, கட்சிக்கு தலைவரின் பிறந்தநாள் வருவதால் அப்போது இந்நிகழ்ச்சி நடைபெற்ற பெரிய வாய்ப்புகள் உள்ளது.