56 வயது பெண்னை கரம்பிடிக்கும் 19 வயது இளைஞன் - காதலுக்கு கண் இல்லதாங்க..

Thailand Marriage Viral Photos Relationship
By Sumathi Oct 31, 2022 10:01 AM GMT
Report

வயது முதிர்ந்த பெண்னை 19 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்யவுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் மோகம் 

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் வுத்திச்சாய் சந்தராஜ்(19). இவர் ஜன்லா நமுவாங்ராக்(56) என்ற பெண்னை ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே 37 வயது வித்தியாசம். வடகிழக்கு தாய்லாந்தின், சகோன் நகோன் மாகாணத்தில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

56 வயது பெண்னை கரம்பிடிக்கும் 19 வயது இளைஞன் - காதலுக்கு கண் இல்லதாங்க.. | 19Year Old Engaged 56 Year Grandmother Thailand

அப்போது 9 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டைச் சுத்தம் செய்ய சந்தராஜ் உதவியை நாடியுள்ளார் அந்தப் பெண். இவ்வாறு அடிக்கடி அந்தப் பெண்னுக்கு உதவியுள்ளார் இளைஞர். இது நட்பாக மாறி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு முன் இருந்து இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

37 வயது வித்தியாசம்

இதுகுறித்து இளைஞர் கூறுகையில், கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் உறவில் இருக்கிறோம். ஜான்லா ஒரு கடின உழைப்பாளி. நேர்மையான நபரும் கூட.. இப்போது மோசமான வீட்டில் வசிக்கிறார். அதை மாற்ற வேண்டும். அவர் வசதியாக வாழ வேண்டும். எனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவரை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்றால் அது இவரைத்தான் என்று கூறியுள்ளார்.

56 வயது பெண்னை கரம்பிடிக்கும் 19 வயது இளைஞன் - காதலுக்கு கண் இல்லதாங்க.. | 19Year Old Engaged 56 Year Grandmother Thailand

ஜான்லாவுக்கு 10 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகியுள்ளது. அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அனைவரும் 30 வயதை கடந்தவர்கள். முதலில் இவர்களது உறவை ரகசியமாகவே வைத்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, தற்போது திருமணம் செய்யவுள்ளனர்.

விரைவில் திருமணம் 

மேலும், இதுகுறித்து ஜான்லா கூறுகையில், சந்தராஜ் எனக்கு ஒரு சூப்பர் ஹீரோ. தினமும் எனக்கு உதவுவான். அவன் வளர்ந்ததும் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை மற்றவர்களிடன் தெரிவிக்கையில் எங்களை பைத்தியம் என்று எண்னினர்.

குழந்தைகளும்கூட அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அவன் என்னை மீண்டும் இளமையாக்குகிறான். நிச்சயம் திருமணம் செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.