1986ல் ராயல் என்பீல்டு பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா - வைரல் பில்!
1986-ல் வாங்கிய ராயல் என்ஃபீல்டு பில் ஒன்று வைரலாகி வருகிறது.
ராயல் என்ஃபீல்டு
இந்தியாவில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்று ராயல் என்ஃபீல்டு புல்லட் 350. இன்றும் இந்த பைக் மீதான மக்களின் மோகம் நீடித்த படியே உள்ளது.
இதில் அம்சங்கள் அப்டேட் ஆகி வருவதால் இந்த மோட்டார் சைக்கிளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. . ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 தற்போது ரூ. 1,50,795 முதல் ரூ. 1,65,715 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆன்ரோடு விலை சுமார் ரூ. 1.8 லட்சம்.
வைரல் பில்
ஆனால், 1986ஆம் ஆண்டு புல்லட்டின் விலை 18,700 (ஆன்ரோடு) ரூபாய். ஜார்கண்டைச் சேர்ந்த சந்தீப் ஆட்டோ புல்லட் 350 மாடல் வைரல் பில் எனத் தெரியவந்துள்ளது.
புல்லட் தற்போது இரண்டு வகைகளில் வருகிறது - புல்லட் 350 மற்றும் புல்லட் 350 ES.
புல்லட் 350-யின் கார்ப் எடை 191 கிலோ. 6 வண்ணங்களில் கிடைக்கிறது. சுமார் 37 kmpl மைலேஜை வழங்குவது குறிப்பிடத்தக்கது.