19 வயது பெண் காதலனுடன் சேர்ந்து பாலியல் தொழில் - 3 பேர் மீட்பு!
பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழில்
சென்னை, எலும்பூரில் லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நடத்திய சோதனையில், லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து பிரகாஷ் என்பவர் பெண்களை வைத்து காதலி ஜெயபிரதா என்பவருடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சிக்கியதும் தனக்கு ஒன்றும் தெரியாது. நான் சாப்பாடு கொடுக்க வந்தேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து, செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில் ஜி.பே.மூலம் பலர் பணம் செலுத்தி இருப்பது தெரிய வந்தது.
3 பெண்கள் மீட்பு
மேலும், காதலி சிக்கியவுடன் பிரகாஷ் தப்பி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் அங்கிருந்து 3 பெண்கள் மீட்கப்பட்டனர். 19 வயது பெண் பெங்களூர், மகாரஷ்டிரா, தர்மபுரியைச் சேர்ந்த பெண்கள் ஆவார்.
இதற்கிடையில் இந்தப்பெண் சில நாட்களுக்கு முன்புதான் சிக்கியுள்ளார். பிரபல என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 3-வது ஆண்டு படித்து வரும் இவர் மீண்டும் பாலியல் புரோக்கர்களிடம் மாட்டியுள்ளார்.