பெண்களை குறி வைத்து பாலியல் தொழில்…பிரபல நடிகர் கைது - ரசிகர்கள் ஷாக்…!
பெண்களை குறி வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பிரபல நடிகர் மஞ்சுநாத் சஞ்சுவை போலீசார் கைது செய்துள்ள சம்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களை குறி வைத்து பாலியல் தொழில்
கன்னட சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டு ‘நியூரான்’ என்ற படத்தில் நடித்தவர் நடிகர் மஞ்சுநாத் சஞ்சு. இப்படத்தின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமடைந்தார்.
இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து, தங்களின் பாலியல் தொழிலுக்கான அப்ளிக்கேஷனில் அந்த போட்டோக்களை பதிவேற்றம் செய்து இதன் மூலம் பலரை ஏமாற்றி பண மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்திருக்கிறது.
நடிகர் மஞ்சுநாத் சஞ்சு கைது
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்தக் கும்பலை குறி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், மஞ்சுநாத் சஞ்சு, மல்லிகார்ஜுனன், ராஜேஷ், மோகன், அனுமேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக நடிகர் மஞ்சுநாத் சேர்க்கப்பட்டிருக்கிறார். இவர்தான் இந்தக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நடிகர் மஞ்சுநாத் சஞ்சுவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.