82 வயது மூதாட்டியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை - 18 வயது சிறுவன் வெறிச்செயல்!

Tamil nadu Chennai Sexual harassment Crime
By Jiyath Jan 29, 2024 04:15 AM GMT
Report

82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழப்பு 

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த ஆதரவற்ற மூதாட்டி பொன்னி (82). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உணவளித்து வருகின்றனர்.

82 வயது மூதாட்டியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை - 18 வயது சிறுவன் வெறிச்செயல்! | 18 Year Old Boy Was Arrested For Raping Old Woman

கடந்த 25-ம் இந்த மூதாட்டி சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

மகளை கொன்ற மருமகன் - பேண்ட், டீ-ஷர்ட் அணிந்து சென்று மாமியார் செய்த காரியம்!

வாலிபர் கைது 

இதில் மூதாட்டி பொன்னி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

82 வயது மூதாட்டியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை - 18 வயது சிறுவன் வெறிச்செயல்! | 18 Year Old Boy Was Arrested For Raping Old Woman

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் மர்ம வாலிபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை சாலையில் தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில் எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து 18 வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.