ஒரு தும்மலால் ஒரே நிமிடத்தில் பிரிந்த உயிர் - 18 வயது இளைஞர் பரிதாப பலி!

Viral Video Uttar Pradesh Death
By Sumathi Dec 05, 2022 07:08 AM GMT
Report

தும்மலால், 18 வயது நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தும்மல்

உத்தர பிரதேச மாநிலம் கித்வாய்நகர் காலி பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் ஜுபைர் (18). இவர் தனது நண்பர்களுடன் இரவில் மீரட் நகரில் தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு தும்மல் வந்துள்ளது.

ஒரு தும்மலால் ஒரே நிமிடத்தில் பிரிந்த உயிர் - 18 வயது இளைஞர் பரிதாப பலி! | 18 Year Old Boy Died By Sneezing Up

நடந்தபடியே தும்மிய ஜுபைர், சில விநாடிகளில் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த அவரை நண்பர்கள் எழுப்ப முயற்சித்தனர். ஆனால் ஜுபைர் எழுந்திருக்காததால் பதறிப்போன நண்பர்கள் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பறிபோன உயிர்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜுபைர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்களின் தரப்பில் இளைஞருக்கு தும்மலை தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜுபைர் சரிந்து விழுந்து இறந்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.